இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் இந்தியாவுக்கு வாய்ப்பு
புதுடில்லி, ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினத்தை பொறுப் பேற்று நடத்த இந்தியாவை, அய்.நா. சபை தேர்ந்தெடுத்து உள்ளது. ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாடு, சுற்றுச்சூழல் தினத்தை பொறுப்பேற்று நடத்த அய்.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு வாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க அய்.நா. சபை கேட் டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங் களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இது குறித்து அய்.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட இயக்குநர் ஆசிம்ஸ்டீனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை பொறுப்பேற்று நடத்த இந்தியாவை தேர்வு செய்திருப்பதன் மூலம் அந்த நாட்டுக்கும், அய்.நா.வுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
120 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அங்கு பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. இன்றைய சூழலில் சர்வதேச சமுதாயத்துக்கு இந்தியா ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது.
தாவரவியல், வனவிலங்கு பாதுகாப்பு, குடிநீர், இயற்கை வளங்களைப் பேணுதல், சுந்தர வனக்காடுகளை பாதுகாத்து அதன் பரப்பளவை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளது. உலகின் மிக அரிய வகை வனவிலங்கு களின் புகலிடமாகவும் அந்த நாடு விளங்குகிறது. எனவே, உலக சுற்றுச் சூழல் தினத்தை நடத்த இந்தியா தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது பொருத்தமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தினத்தை நமது கல்லூரி மாணவர்கள் மாணவிகள் மற்றும் விரிவுரையாளர்கள் சிறிது கடைபிடித்து நமது கல்லூரி சுற்றி சுத்தம் செய்ய முன்வரவேண்டும்
No comments:
Post a Comment